Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

போருக்கு தயாராகுங்கள் - வடகொரிய ராணுவத்துக்கு கிம் உத்தரவு

போருக்கு தயாராகுங்கள் - வடகொரிய ராணுவத்துக்கு கிம் உத்தரவு

கடந்த செப்டம்பரில் வடகொரியா, தென்கொரியா இடையிலான ராணுவமற்ற எல்லைப் பகுதியில் ஏற்பட்ட கண்ணிவெடி வெடிப்பில் தென்கொரிய வீரர்கள் மூவர் காயமடைந்தனர்.

பகிரவும் WhatsApp Facebook

வடகொரிய ராணுவ வீரர்களுக்கான பயிற்சிகளை தீவிரப்படுத்தி, போருக்குத் தயாராக இருக்கும்படி ராணுவத் தளபதிகளுக்கு அந்நாட்டு தலைவர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார். தென்கொரியாவுடனான எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அவரது இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

வடகொரியாவின் மூன்றாவது ராணுவப் பிரிவு தளபதிகள் கூட்டம், தலைநகர் பியாங்யாங்கில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ராணுவ அதிகாரிகளைச் சந்தித்த கிம் ஜாங் உன், அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். அப்போது, ராணுவப் பிரிவுகளைப் போருக்குத் தயாரான நிலையில் வைத்திருப்பதே தளபதிகளின் முக்கியப் பணி என்று அவர் வலியுறுத்தினார்.

ராணுவ வீரர்களின் பயிற்சிகள் கடுமையாகவும் தீவிரமாகவும் இருக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு பிரிவும் எந்தவொரு போர்ச் சூழலையும் எதிர்கொள்ளும் திறனைப் பெற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். ராணுவத்தின் போர் திறனை மேம்படுத்துவதுடன், வீரர்களின் ஒழுக்கம், மன உறுதி ஆகியவற்றையும் வலுப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

கடந்த செப்டம்பர் மாதம் வடகொரியா, தென்கொரியா இடையிலான ராணுவமற்ற எல்லைப் பகுதியில் ஏற்பட்ட கண்ணிவெடி வெடிப்பில் தென்கொரிய வீரர்கள் மூவர் காயமடைந்தனர். இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தச் சம்பவத்துக்குத் தங்கள் நாடு காரணமல்ல என்று வடகொரியா மறுத்துள்ளது.

இந்நிலையில், ராணுவப் பயிற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கிம் ஜாங் உன்னின் உத்தரவு, கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரிக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

முந்தைய செய்தி
இலங்கை நிறுவனத்துடன் ஐஐடிஎம் ஒப்பந்தம்
அடுத்த செய்தி
உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கு 90% கடனுதவி

தொடர்புடைய செய்திகள்